21 JUMP STREET – சினிமா விமர்சனம்



சென்ற பதிவான HORRIBLE BOSSES  திரைப்படத்தைத்தொடர்ந்து அடுத்தும் ஒரு காமெடித்திரைப்படத்தையே பார்க்கப்போகின்றோம் . இதிலும் ஆங்கிலத்திரைப்படங்கள் என்றாலே வரும் சிற்சில கெட்டவார்த்தைகள் இடம்பெறும் . அதிலும் நமது ICE CUBE இருப்பதால் மனிதர் வரும் காட்சியெலெல்லாம் தாருமாறான புதுப்புது வார்த்தைகளாக பேசியிருப்பார் . மற்றபடி ஒரு பார்ட்டி காட்சியில் ஒரே செகன்ட் மட்டும் சில பிட்டுகள் வரும் . பரவாயில்லை  என்றால் , பெரிய உறுத்தலாக இல்லாமல் காமெடியாகவே இருக்கும் .

படத்தின் கதை என்று சொன்னால் பள்ளிகளில் நடக்கும் போதைப்பொருள் விற்பனையைக்கண்டுபிடிக்க , பள்ளிமாணவர்களாகச்செல்லும் இரு போலிஸ்காரர்களின் சாகசம் என்று சிம்பிளாக சொல்லிவிடலாம் . என்னது ? இதை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதா ? அது நம்ம தல நடித்த ஏகன் படத்தைப்போத்தான் இருக்கும் . ஆனால் ஏகன் படமல்ல  . இப்படம்  1987 – ல் 21 JUMP STREET எனும் பெயரிலேயே வெளிவந்த ஒரு சீரியலின் தழுவல் . இதேபோல் நம் தளத்தில் ஏற்கனவே THE FUGITIVE திரைப்படத்தையும் பார்த்திருக்கிறோம் . சரி , விரிவான கதையை நோக்கிப்பயணிப்போம் .



ஷிமித் , ஜெங்கோ இருவரும் தங்களின் பள்ளிநாட்களிலேயே எதையோ இழந்தவர்கள் போலிருப்பவர்கள் . இருவரும் 7 ஆண்டுகளுக்குப்பின் போலிஸில் சேர்கிறார்கள் . பயிற்சியின்போது படிப்பில் கில்லாடியான ஷிமித் ஜெங்கோவுக்கு உதவ , பிஸிக்கலில் ஜெங்கோ ஷிமித்திற்கு உதவுகிறார் . இருவரும் போலிஸ் அகாடமியில் வெற்றிபெற்று போலிசானபின் ஒரு கும்பலைக் கைது செய்கிறார்கள் . ஆனால் சில விதிகளின் காரணமாக அந்த கும்பல் வெளிவந்துவிடுகிறது . இவர்களிருவரையும் JUMP STREET எனுமிடத்தில் கேப்டன் டிக்சன் தலைமையில் செயல்படும் அன்டர்கவர் அமைப்பில் அனுப்பிவிடுகிறார்கள். அங்கே இருவருக்கும் ஒரு அசைன்மென்ட் கிடைக்கிறது .   அதாவது ஒரு பள்ளியில் HFS (இதற்கான மீனிங்கை அறிய விக்கிக்குச் செல்லுங்கள் ) எனப்படும் ஒருவிதமான புதிய போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறது . அதன்காரணமாக மாணவன் ஒருவன் இறந்துவிட , அந்த போதைப்பொருள் கும்பலைக் களையெடுக்க வேண்டியது தான் இவர்களின் அசைன்மென்ட் . இவர்கள் இருவரும் பள்ளியில் சேர்ந்தபின் தங்களின் ஐடென்டிகளை மாற்றிக்கொள்கிறார்கள் . படிப்பில் கெட்டியான ஷிமித் EXTRA CURRICULAR ACTIVITY – யிலும் , ECA –வில் வல்லவரான ஜெங்கோ படிப்பிலும் என தங்களின் துறைகளைத்தேர்ந்தெடுத்து கொள்கிறார்கள் . அதன்பின் பள்ளியில் எப்படி அவர்கள் துப்பறிந்து அந்த போதைக் கும்பலைப் பிடித்தார்கள் என்பதை படத்தைப்பார்த்து தெரிந்துகொள்ளவும் .

ஷிமித் ஆக ஜோனா ஹில் . WOLF OF THE WALL STREET படத்தில் இவர் செய்யும் விஷயங்களைப்பார்த்து சிரிக்காமல் இருக்கவே முடியாது .அதேப்போல தான் இப்படத்திலும்  . ஜெங்கோவாக டாட்டும் , THE LEGO MOVIE யில் சூப்பர்மேன் கேரக்டருக்கு குரல் தானம்  செய்தவர் இவர்தான் . GI JOE திரைப்படங்களில் DUKE கேரக்டரில் நடித்திருக்கிறார்  . ஆங்காங்கே சில காட்சிகளில் வந்தாலும் ICE CUBE தனக்கே உரிய இழுத்து இழுத்து திட்டும் முரட்டுத்தனமான புதிதுபுதிதான திட்டல்கள் அட்டகாசம் . இதுபோதாதென்று திடீரென என்ட்ரி கொடுத்து பட்டென செத்துப்போகும் வேடத்தில் ஜானி டெப் .  வால்டர்ஸ் ஆகவும் வில்லனாகவும் வரும் ராப் ரிக்கல்ஸும் தன்னால் முடிந்தவரை சிரிக்கவைத்துள்ளார் . பள்ளி நாடகவிழாவில் இவர் செய்யும் காமெடிகள் அட்டகாசம் . வழக்கமாக ஆங்கில காமெடித்திரைப்படங்களாகட்டும் , அனிமேஷன் திரைப்படங்களாகட்டும் , பார்ப்பதற்கு புஷ்டியாக , ஒருவிதமான பாவமான முகத்தை வைத்திருப்பவர்களைத்தான் குழந்தைத்தனமாக காட்டுவார்கள் . அவரின் கேரக்டர் தான் எதையாவது இழந்தது போல இருக்கும் . இந்த கேரக்டர் தான் கடைசியில் தான் தான் ஹீரோ என்பதுபோல ஏதாவது வித்தியாசமாக சிந்தித்து படத்தின் கிளைமேக்சை முடித்துவைக்கும் .இன்னொரு கேரக்டர் செம ஜாலியாகவே இருக்கும் . அது பாட்டுக்கு பெண்கள் , நட்பு  , விளையாட்டு என்றே மனம்போன போக்கில் திரியும் . ஏதாவதொரு ஆபத்தான கட்டத்தில் பரிதாபத்திற்குரிய கேரக்டர் , இந்த கேரக்டரின் உயிரை வில்லனிடமிருந்து காப்பாற்றி இதனுடைய நட்பைப்பெறும் . நம்ம ஆமைமுயல் கதை போல . எகாவாக சொல்லவேண்டுமெனில் மான்ஸ்டர்ஸ் யுனிவர்சிட்டி போன்ற படங்களைக்குறிப்பிடலாம் . ஆனால் இப்படத்தில் அப்படியே உல்டாவாக்கி இருப்பார்கள் . ஆள் பார்க்க பரிதாபமாக , துளிகூட பிஸிக்கல் பிட்னஸ் இல்லாமல் பேக்கு போல இருக்கும் ஷிமித் தான் அட்டகாசம் செய்வார் . அதனாலேயே இத்திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது .

மொத்தத்தில் ஒரு ஜாலியான காமெடித்திரைப்படத்தைப் பார்க்கவேண்டுமெனில் இத்திரைப்படத்தைக்காணலாம்.  ஹீரோக்களை வில்லன்கள் துரத்தும் காட்சிகள் , கிளைமேக்ஸில் ஒரிஜினல் வில்லனின் மெயின் பாயிண்டை ஹீரோ சுடுவது , இருவரும் வேறுவழியின்றி HFS –ஐ சாப்பிட்டுவிட்டு செய்யும் விளையாட்டுகள் என ஒவ்வொரு காட்சியிலும்


அடுத்த பதிவு ,வேறென்ன  இதன் இரண்டாம் பாகம் தான்

Comments

  1. உல்டாவாக மாற்றியது தான் படத்தின் வெற்றியோ...? நல்ல விமர்சனம்...

    ReplyDelete
  2. சிறந்த கருத்துப் பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  3. விமர்சனம் கலக்குறீங்க.... நண்பரே....
    தமிழ் மணம் 3

    ReplyDelete
  4. ரொம்பநாளா டவுன்லோட் பண்ணி பார்காம வச்சு இருந்தன் இனி பாத்திட வேண்டியதுதான்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை