Posts

Showing posts from February, 2015

Mr.PEABODY & SHERMAN – சினிமா விமர்சனம்

Image
டைம் ட்ராவல் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது ? நாமும் 17-ஆம் நூற்றாண்டிலிருந்து  மண்டையைக்குடைந்து கொண்டேதானிருக்கிறோம் . இன்னும் காலப்பயணம் என்பது கனவுப்பயணமாகவே இருக்கிறது . (17-ஆம் நூற்றாண்டு என்பது மேலைநாட்டினவர்க்கு . நமக்கெல்லாம் மஹாபாரதத்திலேயே ஒரு இன்டர்ஸ்டெல்லர் கிளைக்கதை இருக்கிறது .) சரி , அம்மாதிரியான விஷயங்களைத்திரைப்படத்தில் பார்த்து சிலாகிப்பது தான் நம்விதி என்றால் யாரால் மாற்றமுடியும் . இந்த படம் டைம்ட்ராவலை அடிப்படையாகக்கொண்ட ஒரு அனிமேஷன் , அட்வெஞ்சர் , பேமிலி ட்ராமா . இது நான் எழுதும் இரண்டாவது அனிமேஷன்  திரைப்படம் என தினைக்கிறேன் . ஏற்கனவே டைம் ட்ராவலை அடிப்படையாக கொண்டு THE TIME TRAVELER’S WIFE , INTERSTELLAR ஆகிய திரைப்படங்களைப்பார்த்துள்ளோம் . இந்த படத்தில் நம்மை அசத்தும் விஷயம் என்னவென்றால் , படத்தில் காலப்பயணம் செய்யும் இடங்களும் சந்திக்கும் மனிதர்களும்தான் . அப்படி யார் யாரை சந்திக்கிறார்கள் என்கிறீர்களா ? எகிப்திய பாரோ டட்டான்க் ஆமன் , மோனலிசா புகழ் ஓவியர் லியானர்டோ டாவின்ஸி , பிரஞ்சுப்புரட்சியின்போது பிரான்ஸ் அரசியான மேரி அன்டோனன்ட் , மஹாத்

CN’S - INCEPTION – ஒரு பார்வை

Image
“ FILMS ARE SUBJECTIVE – WHAT YOU LIKE , WHAT YOU DON’T LIKE . BUT THE THING FOR ME THAT IS ABSOLUTELY UNIFYING IS THE IDEA THAT EVERYTIME I GO TO THE CINEMA AND PAY MY MONEY AND SITDOWN AND WATCH A FILM GO UP ONSCREEN , I WANT TO FEEL THAT THE PEOPLE WHO MADE THAT FILM THINK IT’S THE BEST MOVIE IN THE WORLD , THAT THEY POURED EVERYTHING INTO IT AND THEY REALLY LOVE IT . WHETHER OR NOT I AGREE WITH WHAT THEY’VE DONE , I WANT THAT EFFORT THERE – I WANT THAT SINCERITY . AND WHEN YOU DON’T FEEL IT , THAT’S THE ONLY TIME I FEEL LIKE I’M WASTING MY TIME AT THE MOVIES ” -      CHRISTOPHER NOLAN காமிக்ஸ் தழுவலும் இல்லை . நாவல் அடாப்சனும் இல்லை . வீடியோகேம்களை கொண்டும் உருவாக்கப்படவில்லை . தொலைக்காட்சித்தொடர்களைத்தழுவியும் எடுக்கப்படவில்லை . ஆனால் இன்செப்ஷன் மேற்கண்ட தழுவல்களில் அந்த சம்மரில் வந்த அத்தனைப்படங்களையும் ஊதித்தள்ளி வெற்றிக்கொடி நாட்டியது . இத்தனைக்கும் ஒரு சின்ன விஷயத்தை வைத்து 830 மில்லியன் டாலர் சம்பாதிப்பது என்பது சாதாரண விஷயமா