Eternal Sunshine Of Spotless Mind - சினிமா விமர்சனம்







என்றுமே இனிய முடிவுகளை உடைய திரைப்படங்கள் நம் மனதிற்கு ஒரு சந்தோஷத்தை தரும்.அதிலும் காதல் திரைப்படங்கள் என்றால் சொல்லவா வேன்டும்? அப்படி ஒரு இனிமையான காதல் அனுபவமே இந்தத்திரைப்படம்.



நாம் காலையில் கண்விழிக்கிறோம்.அந்தநாள் நமக்கு வாழ்வின் முக்கியமான நாள்.நம் வாழ்வில் விரும்பி இழந்த ஒருவர் நினைவாக ஓரிடத்திற்கு செல்ல நினைக்கிறோம்.அச்சமயம் பார்க்கிங்கில் உள்ள நம் காரோ அல்லது பைக்கோ ஆக்சிடன்ட் ஆகி உள்ளது. பார்த்ததும் டென்சனாகி,வேறு வழியின்றி மனம் போன போக்கில் ரயில்வே ஸ்டேசனோ பஸ் ஸ்டாண்டோ செல்கிறோம்.நாம் போக வேண்டிய இடத்திற்கு வரும் பஸ்ஸையோ ட்ரெயினையோ விட்டு வேறு பஸ் (அ) ட்ரெயின் ஒன்றில் ஏறும்படி மனம் சொல்கிறது.மனம்போன போக்கில் ஒரு கடற்கரைக்கு செல்கிறோம்.அங்கே திடிரென்று ஒரு பெண் நம்மை கவர்கிறாள். அவளைப்பார்த்தாலும் பேச ஒரு பயம். ஆனால் பயணத்தின் போது அதிசயமாக அவளே வந்து பேசுகிறாள்.அவளை நமக்கு மிகவும் பிடித்துப்போகிறது.அன்று நாள் முழுவதும் அவளுடன் கழிக்கிறோம்.அவளை திருமணம் செய்ய மனம் விரும்புகிறது.அவளும் நம்மை விரும்புகிறாள் என்று அறிகிறோம். அடுத்த நாள் , அவள் நம் வீட்டிற்கு வருவதாக கூறுகிறாள்.அவளை பிக்கப் செய்ய அவள் வீட்டின் அருகே காரில் இருக்கும் போது அவளுக்கு ஒரு கொரியர் வருகிறது.அதை திறந்தால் ஒரு ஆடியோ கேசட்.அதை நம் காரில் ஓடவிட்டு அவளுடன் அமர்ந்து கேட்கும் போது அந்த கேசட்டில் அவள் நம்மை பற்றி அசிங்க அசிங்கமாக பேசுகிறாள்.”அவனுடன் எந்த பெண்ணாலும் வாழமுடியாது.அவன் என்னை சந்தேகப்படுகிறான்.தயவு செய்து என் மூளையில் இருந்து அவன் நினைவுகளை அழித்துவிடுங்கள்”என அவள் புலம்புகிறாள்.இதைக்கேட்டதும் நமக்கு எப்படி இருக்கும்.அவளை விட்டு விட்டு நம் வீட்டிற்கு வந்தால் நமது வீட்டிலும் ஒரு ஆடியோ கேசட்.அவளைப்போலவே நாமும் அவளைத்திட்டி கடைசியில் என் நினைவுகளை அழித்துவிடுங்கள் என புலம்பி பேசியிருக்கும் ஆடியோவை நாம் கேட்கிறோம்.



என்ன,உங்களுக்கு ஒன்றும் புரியவில்லையா?


கதை இது தான்.காதலிக்கும் இருவர்க்குள் ஏற்படும் சிறு சிறு சண்டையின் விளைவாக காதலியானவள் தன் காதலனை மறப்பதற்காக ஒரு மருத்துவரை அணுகுகிறாள்.அம்மருத்துவர் அவள் மூளையிலிருந்து காதலனின் நினைவுகளை அழித்துவிடுகிறார்.இதைக்கேள்விபட்ட காதலன் அவள் மட்டும் தான் அழிப்பாளா? என கங்கணம் கட்டி தன் நினைவுகளை அழிக்கவும் அதே மருத்துவரிடம் அணுகுகிறான்.

TREATMENTன் போது அதாவது அவன் நினைவுகள் அழிக்கப்படும்போது REVERSE METHODEல் அவன் நினைவுகள் அழிக்கப்படுகிறது.முதலில் அவர்கள் பிரிதல்.பிரிதலுக்கான சண்டை,அதற்கு முன் ஏற்படும் முதல் சண்டை,அதற்குமுன் இருவரின் காதல்,இருவரும் பழகியது,இருவரும் முதல் சந்திப்பு,என இவ்வாறு அழிக்கப்படுகிறது.அப்போது அவனின் காதல் பசுமைநினைவுகளை நினைத்ததும் அவளை மறக்கக்கூடாது என்று எண்ணி அவளை அவனின் ஆழ்மனதில் ஒளித்துவைக்க பெருமுயற்சி செய்கிறான்.ஆனால் அவன் நினைவுகள் அழிக்கப்படுகின்றன.அதன்பின் மேலே படித்த பத்திகளை படித்தால் உங்களுக்கு புரியும்.

என்னுடைய இந்த விமர்சனம் போலதான் திரைக்கதையும் நான்-லீனியர் வகையைச்சார்ந்தது.



 ஹீரோவாக Jim Carrey,ஹீரோயின் டைட்டானிக் புகழ் Kate Winslet ஆகியோர் நடித்துள்ளனர்.மேலும் சிறு வேடத்தில் SpiderMan புகழ் Kirsten Dunst ,Lord Of the Rings புகழ் Elijah Wood,Avengers,Shutter IslanD படங்களில் நடித்துள்ள Mark Ruffalo  ஆகியோரும் உள்ளனர்.


இந்தப்படத்தில் என்னை மிகவும் கவர்ந்த முதல் விஷயம் கேட்வின்ஸ்லெட்டின் அற்புதமான பாத்திரபடைப்பு.மிக நேர்த்தியாக அழகாக படைக்கப்படிருக்கும்.இந்த படத்தில்தான் அவர் என்னை மிகவும் கவர்ந்தார்.அவரின் ஒவ்வொரு செய்கையும் அவ்வளவு எதார்த்தமாகவும் அழகாகவும் இருக்கும்.கிளைமேக்சில் அவரும் ஜிம்கேரியும் பேசும் வசனங்கள் காதலை சொட்டசொட்ட வார்த்தையில் வடித்துள்ளதைப்போலிருக்கும்.


எனக்குத்தெரிந்து டைட்டானிக் படத்தில்கூட இவ்வளவு அழகான காதல் இல்லை என்றே கூறுவேன்.


படத்தில் முக்கிய பணி ஆற்றியவர்கள்:
Directed by Michel Gondry
Music by Jon Brion

Cinematography by Ellen Kuras

Film Editing by Valdís Óskarsdóttir
...

இதற்கடுத்து படத்தின் திரைக்கதை, எடிட்டிங்,ஓளிப்பதிவு மற்றும் இசை ஆகியவற்றைப்பற்றி கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும்.ஒளிப்பதிவாளர் நம்மை சிலகாட்சிகளில் குளிர்தேசத்திற்கும்,பல காட்சிகளில் 3D கண்ணாடி இல்லாமலே கதைநடக்கும் இடத்தின் அருகே கூட்டிச்செல்கிறார்.இசை என்பது படத்தில் எங்கு இருக்கிறது என்று தெரியாத அளவிற்கு படத்திற்கு இசைக்குபதில் உயிர்ப்பை வழங்கியுள்ளார் இசையமைப்பாளர் ஜான் ப்ரெயன்.

இந்த படம் IMDB(INTERNATIONAL MOVIE DATABASE)ல் 8.4 மதிப்பெண்கள் பெற்று 83 இடத்திலும் சிறந்த SCINCE-FICTION படவரிசையில் 9வது இடத்திலும் உள்ளது.


மொத்தத்தில்,

இந்த திரைப்படம் காதலிப்பவர்கள்,காதலில் 

பிரிந்தவர்கள்,குடும்பஸ்தர்கள்,திரைப்பட விரும்பிகள் என 

அனைவரும் பார்க்கும் வண்ணம் 

உள்ளது.ஆங்கிலப்படங்களுக்கென்று வரும் சில லிப்லாக் 

கிஸ்கள் சிலவரும்.ஒரு சின்ன கில்மா சீனும் உள்ளது.

(ஹிரோ,ஹீரோயினுக்கு என்று எண்ணிவிடாதீர்). மற்றபடி , 

அனைவரும் பார்க்கும்விதமான , நேர்த்தியான காதல் 

திரைப்படம் இது .





இந்தபடத்தின் கருத்து என்னவெனில்
நீங்கள் விரும்பும் ஒருவரை மூளையில் இருந்து தூக்கி எறியலாம்.ஆனால் மனது அவர்களை மீண்டும் ஏற்கும்.


Comments

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை